செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (10:35 IST)

படப்பிடிப்பில் குடிபோதையில் தள்ளாடிய இளம் நடிகை!

நடிகர், நடிகைகள் தங்கள் நிஜ வாழ்க்கையில் பரந்த சுதந்திரத்தோடு இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான், பார்ட்டி,  பழக்கம், காதல் கல்யாணம் என அவர்களின் சொந்த வாழ்க்கைகளை பற்றிய கிசுகிசுக்களும் அவ்வப்போது வெளிவந்துவிடும். 
அப்படித்தான் தற்போது பிரபல நடிகைக்கு படத்தில் ஒரு பாடலுக்கு குடிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் தேவர்  கொண்டா நடிப்பில் டேக்ஸி வாலா என்ற படம் வரும் நவம்பர் 16 ம் தேதி வெளியாகவுள்ளது.
 
இப்படத்தின் ஹீரோயின் பிரியங்கா ஜவால்கர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது அந்த படத்தை பற்றி பேசிய அவர், இப்படத்தின் ஒரு காட்சிக்காகவே தான் குடித்தாகவும், அதிலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே குடித்துவிட்டு போதையை படப்பிடிப்பு முடியும் வரை தாக்கு பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடிபோதையில் தேவையற்ற முறையில் சிரிக்கவும் வேண்டுமாம்.
 
இதற்காக மிகவும் சிரமப்பட்டேன் என்று அந்த நடிகை கூறியுள்ளார்.