ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:12 IST)

டான்ஸ் ஆடிக்கொண்டே பாடம் நடத்தும் ஆசிரியர் – வைரலான வீடியோ

ஒடிசாவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே பாடம் சொல்லித்தரும் வீடியோ இணையத்தில் பிரபலமாகி உள்ளது.

பொதுவாகவே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடுகடுப்பான ஆசிரியர்களை பார்த்தால் பயப்படுவார்கள். பள்ளிக்கு போகவே பயப்படுவார்கள். அதே பள்ளியில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஆசிரியரும் இருப்பார். அவருக்காகவே பள்ளிக்கு வரும் மாணவர்களும் இருப்பார்கள்.

அதுபோல குழந்தைகளுக்கு பிடித்த ஆசிரியராய் இருப்பவர்தான் ஒடிசாவை சேர்ந்த பிரபுல்லா குமார். ஒடிசாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் பிரபுல்லா குமார். குழந்தைகளுக்கு வழக்கமாக கரும்பலைகளில் எழுதி போட்டு பாடம் நடத்துவது போல் இல்லாமல் பாட்டு பாடி, டான்ஸ் ஆடியபடி மாணவர்களையும் பாடி ஆட சொல்லி பாடங்களை நடத்துகிறார்.

இதனால் குழந்தைகள் பாடத்தை விரும்பி படிப்பதோடு, பள்ளிக்கும் விடுப்பு எடுக்காமல் ஆர்வமாக வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி பாடம் நடத்தும் இவரது வீடியோவை சமீபத்தில் இவரே ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலர் இதை ரசித்ததுடன், பிரபுல்லா குமாரின் பாடம் நடத்தும் விதத்தையும் புகழ்ந்துள்ளனர்.