உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை- ஒரே நாளில் 304 ரூபாய் உயர்வு !

Last Modified திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:08 IST)
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து சவரன் 29,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ஒரு பவுனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 29, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று திங்கள் கிழமை ஒரே நாளில் மேலும் 304 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 29,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 38ரூபாய் உயர்ந்து ரூ. 3718.00 -க்கு விற்பனையாகிறது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை மும்பை சந்தையில் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.  இதில் மேலும் படிக்கவும் :