1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (18:01 IST)

இந்தியர்களுக்கு ஸ்பெஷல் விசா அறிவித்த துபாய் அரசு! 5ஆண்டுகள் செல்லும்..!

இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை செல்லும் ஸ்பெஷல் விசாவை துபாய் அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவிலிருந்து சுற்றுலா நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் துபாய் இந்த சிறப்பு விசாவை அறிமுகம் செய்துள்ளது.
 
 இதன்படி இந்தியர்கள் அடிக்கடி துபாய் சென்று வருவதற்கு வசதியாக ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும் வகையில் பிரத்யேகமான விசாவை துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
 
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேலும் அதிகரிக்க இந்த புதிய விசா திட்டம் உதவும் என்றும் இந்த விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு முதல் ஐந்து நாட்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியர்களுக்கு பிரத்யேகமாக இந்த விசா அறிவிப்பை வெளியிட்டதால் அதிக அளவில் இந்தியர்கள் துபாய்க்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் துபாய் சுற்றுலா துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடிக்கடி துபாய் செல்லும் இந்தியர்களுக்கும் இந்த விசா வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran