1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:09 IST)

வளர்மதிக்கு எதிரான வழக்கு..! உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை..! உச்ச நீதிமன்றம் உத்தரவு...

valarmathi
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் தங்கள் மீதான பல்வேறு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 
 
இவர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தார்.


அவரது மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்