வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:01 IST)

கார் விபத்தில் பெண் எம்எல்ஏ பலி..! தெலுங்கானாவில் நிகழ்ந்த சோகம்..!

MLA Death
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியின் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கண்டோன்மெண்ட் தொகுதி எம்.எல்.ஏ சனனா, கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் வரவே, அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு சீட் வழங்கப்பட்டது.
 
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கண்டோன்மெண்ட் தொகுதி எம்.எல்.ஏவாக நந்திதா, தெலங்கானா அமைச்சரவையில் இளம் எம்.எல்.ஏவாக வலம் வந்தார்.
 
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் நார்கட்பள்ளி அருகே உள்ள செர்லபள்ளி என்ற இடத்தில் லாஸ்யா நந்திதாவின் கார் சென்றபோது, அதன்மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் காயமடைந்த நிலையில், லாஸ்யா அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்.
 
Car Accident
படான் செருவு என்ற இடத்தில் சென்றபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சங்காரெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.