வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (20:05 IST)

இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை!

jharkhand
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பானீஸ் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஜார்கண்ட மாநிலம், பாகர்பூரில் இருந்து தும்காவுக்கு இரவில் பைக்கில் ரெய்டு சென்றுள்ளார்.  நள்ளிரவு நெருங்கியதால் ஹன்சிதா மார்க்கெட் என்ற பகுதியில் அப்பெண் டென்ட் அடித்து தங்கியுள்ளார்.
 
அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானிஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து, பாதிக்கப்பட ஸ்பானிஷ் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று, ''தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், துன்புறுத்தியதாகவும்'' புகார் அளித்துள்ளார்.  
 
அதன்பின்னர், அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
''ஸ்பானிஸ் பெண் அளித்த புகாரின் அடிப்படையில்  3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக'' போலீஸார் தெரிவித்துள்ளனர்.