1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (19:44 IST)

வரதட்சணையை ஒழிக்க கேரள அரசு புதிய முயற்சி!

இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை இருந்து வருகிறது என்பதும் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரிழந்து வருவதும் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் வரதட்சணை பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது எஅ தகவல் வெளிவந்துள்ளது சமீபத்தில் கூட ஒரு பெண் வரதட்சணை கொடுமை காரணமாக மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் வரதட்சணையை ஒழிக்க கேரள அரசு புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது இதன்படி கேரளாவில் அரசு பணியில் உள்ள ஆண்கள் திருமணம் முடிந்த கையோடு தந்தை மனைவி மாமனாரிடம் இருந்து கையொப்பம் பெற்று வரதட்சணை வாங்காததற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவு காரணமாக கேரளாவில் உள்ள அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது