1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (16:01 IST)

பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டிய இளம்பெண்

உத்தரபிரதேச மாநிலத்தில் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்த முன்னாள் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த அந்த பெண், முன்னாள் காதலனின் நாக்கை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உபி மாநிலத்தில் உள்ள  லக்னோ நகரில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அந்த பெண் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டார்.
 
தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்ட காதலியின் துரோகத்தை பொறுத்து கொள்ள முடியாத அந்த இளைஞர் பக்கத்து ஊரில் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்ற இளைஞர் முன்னாள் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இளைஞரின் நாக்கை வெட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாக்கு வெட்டப்பட்ட இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்