1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (12:29 IST)

உயிருக்கு உலைவைத்த இயர்போன்: உபியில் 3 இளைஞர்கள் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் 3 பேர் இயர்போனை மாட்டிக்கொண்டு ரயில்வே டிராக்கில் நடந்து சென்ற போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
ஸ்மார்ட்போனில் இயர்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து கொண்டு வருகிறது. இயர்போனை காதில் மாட்டிக்கொண்டு அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் சிலர் நாட்டில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். மேலும், பலர் வாகனங்கள் ஓட்டும் போது இயர்போனில் பாட்டு கேட்டு கொண்டே வண்டி ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விபத்து அதிகமாக ஏற்படுகிறது. சிலர் இயர்போனில் பாட்டு கேட்டு கொண்டே ரயில் இருப்புப்பாதையை கடக்கிறார்கள்.
 
இந்நிலையில், உபியில் வசித்து வரும் ஷாகித், டேனிஷ், ராஜேந்திரா என்ற மூன்று இளைஞர்கள் நேற்று அம்மாநிலத்தில் உள்ள சுவாலெங்கார் ரயில்வே கிராசிங் பகுதியில் உள்ள ரயில்வே டிராக்கில் இயர்போனில் பாட்டு கேட்டபடி டிராக்கில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது.
 
இதனை கவனிக்காமால் அந்த 3 இளைஞர்கள் டிராக்கை கடக்கும் போது ரயில் அவர்கள் மீது மோதியது. இதனால் மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.