வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (19:01 IST)

ரொனால்டினோ திருமணத்தை நிறுத்த போவதாக சகோதரி மிரட்டல்

பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்தாட்டக்காரர் ரொனால்டினோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் அந்நாட்டின் தலைப்பு செய்திகளில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வரும் ரொனால்டினோ இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.
 
ஆனால் பிரேசில் நாட்டின் சட்டப்படி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்ய முடியாது. எனவே இந்த சட்டச்சிக்கல்களில் இருந்து தப்பிக்க அவர் இந்த திருமணத்தை ரகசியமாக தனது வீட்டில் ஒருசில குடும்ப உறுப்பினர்கள் முன் நடத்த திட்டமிட்டுள்ளார்.
 
ரொனால்டினோவை திருமணம் செய்யவுள்ள இரண்டு பெண்களும் ஒரே மாதிரியான உடை, நகைகள், மற்றும் அலங்கார அணிகலன்களை வாங்கியுள்ளதாகவும், இரண்டு காதலிகளும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. 
 
இருப்பினும் ரொனால்டினோவின் சகோதரி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பெண்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் திருமண தேதியை வெளியிடாமல் ரொனால்டினோ ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.