1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:58 IST)

600 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து மனைவியை கண்டுபிடித்த கணவன்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் நாயக்(42). இவர் தனது மனைவியுடன் பாலிகுடா கிராமத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி சற்று மனநலம் பாதித்தவர்.
 
இந்நிலையில் மனோகரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். போலீஸார் மனோகரின் மனைவியை தேடுவதில் முனைப்பு காட்டவில்லை. இதனையறிந்த மனோகர் தாமாகவே தனது மனைவியை தேட ஆரம்பித்தார்.
 
தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றினார். மேலும் தனது மனைவியை காணவில்லை என பேப்பரில் விளம்பரம் கொடுத்தார். 25 நாட்களில் 600 கீமீட்டருக்கு மேல் பயணம் செய்த மனோகர், இறுதியாக அவரது மனைவி சாலையோரம் இருக்கும் உணவகத்தில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று அவரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
 
திருமணம் முடிந்து சில நாட்களில் விவாகரத்து கேட்கும் தம்பதியினரிடையே, மனைவிக்காக இத்தனை தியாகம் செய்த மனோகரை பலர் பாராட்டி வருகின்றனர்.