வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2018 (16:20 IST)

காப்பீடு பெறுவதற்காக கணவன் இறந்ததாக கூறி நாடகமாடிய பெண்

கணவன் இறந்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, 6 இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த்துள்ள சம்பவம் ஒன்று  டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருபவர் ஜிதேந்திர சிங், தனது பெயரில் ஆறு நிறுவனங்களில் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இவர் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவரது மனைவி இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து பணம் பெற  திட்டம் செய்தார். அதன்படி அவர் கணவரின் இறப்புச்சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட விரோதமாக பெற்று, அதனை இன்சூரன்ஸ்  நிறுவனங்களிடம் சமர்பித்து, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
 
ஜிதேந்திர சிங் மனைவி காப்பிடு பணம் பெறுவதற்காக பஜாஜ் நிறுவனத்தை அணுகியபோது, அந்த நிறுவனம் சான்றிதழ்களை கண்டு சந்தேகம் அடைந்து  போலீசிடம் புகார் கொடுத்தது. போலீசார் சான்றிதழ்களை சரிபார்த்த போது அனைத்தும் போலி என தெரியவந்தது. 
 
இதனையடுத்து போலீசார் மோசடிக்கு உதவியாக இருந்த மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தது, மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றது.