1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (21:05 IST)

பலநூறு கி.மீ சைக்கிளில் மனைவியை தேடி சென்ற கணவன்

மனோகர் நாயக் என்பவர் காணமல் போன தன் மனைவியை பலநூறு கி.மீ சைக்கிளில் சென்று கண்டுபிடித்துள்ளார்.
 
ஜார்கண்ட் மாநிலம், பலிகோடா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் நாயக். இவருக்கு வயது 42. இவரது மனைவி அனிதா. கடந்த ஜனவரி 14 ஆம் தேதி காணாமல் போய்விட்டார். 
 
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார், போலீசாரால் அவரது மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் அவரே தனது பழைய சைக்கிளை எடுத்து கொண்டு தன் மனைவியை தேட ஆரம்பித்தார். ஒருநாளைக்கு 25 கி.மீ என்கிற கணக்கில் கடந்த 24 நாட்களாக சுமார் 600 கி.மீ சுற்றித் திரிந்தார்.
 
தனது மனைவி காணாமல் போனது குறித்து பத்திரிகைகளிலும் செய்தி கொடுத்தார். அதன்படி அவரது மனைவி கரக்பூர் அருகே இருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், தனது மனைவியை சைக்கிளிலேயே சிட்டாக பறந்து சென்று கண்டறிந்துள்ளார்.