பெண்களை முத்தமிட்டு பிரச்சனையை தீர்க்கும் தில்லாலங்கடி சாமியார்
அசாமில் தான் முத்தமிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என கூறி போலி சாமியார் ஒருவர் பெண்களை அத்துமீறி முத்தமிட்டு வந்துள்ளார்.
அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவன் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாகவும், அதனால் தான் கட்டிப்பிடுத்து முத்தமிட்டு ஆசி வழங்கினால் தீராத பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என பீலா விட்டுள்ளான்.
இதனை நம்பிய அப்பகுதி மக்கள், அந்த போலி சாமியாரிடம் சென்று ஆசி பெற்றனர். அவன் ஏராளமான பெண்களை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து தனது அற்ப செயலை அரங்கேற்றி வந்தான்.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சாமியார் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் போலீஸார் அவனை கைது செய்தனர்.
மக்கள் மூட நம்பிக்கையை நம்பும் வரை, இந்த மாதிரியான போலிச் சாமியார்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.