ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:21 IST)

ஒரு லிட்டர் இயற்கை பெட்ரோல் ரூ.4 - ராமர் பிள்ளை மீண்டும் கைது

இயற்கை பெட்ரோலை விற்பனைக்கு கொண்டு வந்த ராமர் பிள்ளையை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
மூலிகை பெட்ரோலை அறிமுகம் செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. ஆனால், மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலிய பொருள்களான டொலுவின், நாப்தா போன்ற பொருட்களை கலப்படம் செய்து விற்பனை செய்ததாக அவர் மீது புகார் எழுந்து. எனவே, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2016ம் ஆண்டு ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு கொண்டுவருவேன் என ராமர் பிள்ளை பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆகஸ்டு 15ம் தேதி முதல் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வேன் எனக் கூறிய அவர், இயற்கை எரிபொருள் தயாரிப்பு குறித்த ஆய்வு கூடத்தை சென்னை நொளம்பூரில் இன்று திறக்க திட்டமிட்டிருந்தார். மேலும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.4 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.5 ரூபாய்க்கும் விற்பனை செய்வேன் என அவர் அறிவித்திருந்தார்.
 
ஆனால், போலீசார் அதை தடுத்தி நிறுத்தினர். மேலும், ஆய்வு கூடம் அமைப்பதற்கான சான்றுகளை போலீசார் சரிபார்த்தனர். அதன்பின், முறையான அனுமதி பெற்று கூடத்தை திறக்குமாறு அவருக்கு அறிவுரை கூறிய அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியானது.
 
ஆனால், தற்போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.