குற்றவாளியுடன் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய துணிச்சல் பெண்
டில்லியில் ரோஹித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தானாக முன் வந்து, அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் ரோஹித்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது மட்டுமல்லாமல் நடக்க இருந்த திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்.
டெல்லியில் இளம் பெண்ணை காவல் துறை உயர் அதிகாரியின் மகன் ரோஹித் தோமர் சிங் தோமர் தாக்கியது தொடர்பான வீடியோ கடந்த இரண்டாம் தேதி சமூக வலைதளங்களிலும்,ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோஹித்துக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண் தானாக முன் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் ரோஹித்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது மட்டுமல்லாமல் நடக்க இருந்த திருமணத்தையும் நிறுத்திவிட்டார்.
ஒரு இளம் பெண்ணை ரோஹித் கொடூரமாக அவனது நண்பர்கள் முன்னிலையில் வைத்து தாக்குதல் நடத்துவது சம்பந்தமான வீடியோ வைரல் ஆகியிருந்தது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிலும் அந்த வீடியோ காட்சி பட்டதால் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.