வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 மே 2023 (14:36 IST)

பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள்  நாகப்பாம்பு புகுந்ததால் அங்கு இருந்த பாஜகவினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, காங்கிரஸ் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள்  நாகப்பாம்பு புகுந்ததால் அங்கு இருந்த பாஜகவினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அவர்கள் பாம்பை பிடித்தனர்.

இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.