1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வியாழன், 30 மார்ச் 2023 (19:14 IST)

'கோலா நடனக் கலைஞர்' நடனமாடும் போது உயிரிழப்பு

cola dancer dead
கர்நாடக மாநிலத்தில் கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மரணமடைந்தார்.

சமீபத்தில் வெளியான கன்னட சினிமாவில் காந்தாரா படத்தில், கோலா நடனம் இடம்பெறும், இது, கன்னட பிரதேசத்தில்  மக்களிடையே பிரபலம்.

கர்நாடக மாநிலத்தில்,  கடற்கரையோர கிராமங்களில் உள்ள கலைஞர்கள் பூத அராதனா செய்வார்கள்.

இந்த நிலையில், தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று  ‘பூத கோலா ‘நடனம் ஆடிக் கொண்டிருந்த கந்து அஜிலா என்ற நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மரணமடைந்தார்.

அவர் கீழே விழுந்தபோது முதலில் நடிப்பதாக எண்ணிய மக்கள் அவர் உண்மையிலேயே மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து, மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.