1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:31 IST)

சீனா ஊடுருவலால் எல்லையில் திடீர் பதட்டம்: இந்திய வீரர்கள் முறியடித்து சாதனை

சீன வீரர்கள் மீண்டும் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றதாகவும் அதனை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்றனர். அப்போது இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதில் ஒரு தமிழரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சீன தரப்பில் 35 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இந்த மோதலுக்குப் பின்னர் இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்துள்ளனர்
 
கடந்த 29ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதியில் திடீரென சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவ முயன்றதாகவும் ஆனால் அதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து மீண்டும் இந்திய, சீன தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது