செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:54 IST)

இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது: பிரணாப் மறைவு குறித்து வைரமுத்து கவிதை

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து கவிதை வடிவில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
 
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
 
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
 
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை 
நீண்டகாலம் நினைக்கும்.