வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: வியாழன், 6 அக்டோபர் 2022 (22:09 IST)

கர்ப்பிணி பெண் போலீஸ் வயிற்றில் எட்டி உதைத்த கணவர் மீது வழக்குப் பதிவு

கர்ப்பிணி பெண் போலீஸ் வயிற்றில் எட்டி உதைத்து சித்ரவதை செய்த சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் போனகே பள்லியில் வசித்து வருபவர் சுபானி. இவர்,  நெல்லூரில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோலீஸ் ஸ்டேசனில்  பித்ர குண்டவைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னா என்ற பெண்ணும் போலீஸாக பணியாற்றி வருகிறார்.

இவரைக் காதலிப்பதாக சுபானி கூறியதை அடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின், இரு வீட்டாரின் அனுமதியுடன், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், லட்சுமி பிரசன்னா கர்ப்பமாகியிருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சுபானி, கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் அவரை எட்டி உதைத்து சித்ரவதை செய்து,கருவைக் கலைக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து, லட்சுமி பிரசன்னா  நெல்லூர் போலீஸில் புகாரளித்தார். எனவே, சுபானி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Sinoj