வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:42 IST)

இறந்த மகனை 90.கிமீ பைக்கில் தூக்கிச் சென்ற தந்தை !

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் என்ற கிராமத்தைச்  சேர்ந்தவர்  நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா(10).  இவருக்கு சிறு நீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதியில் உள்ள  ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெசேவா உயிரிழந்தார். இறந்த மனனின் உடலை தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு தனியார் ஆம்புலஸின் கேட்டனர். இதற்கு அதிகளவில் பணம் கேட்டபோது, அவரிடம் பணம் இல்லாததால் தன் மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்து, தனது உறவினர் ஒருவரை பைக்கில் வரவழைத்து அதில் கொண்டு சென்றார்.

திருப்பதியில் இருந்து  நரசிம்மலுவின்சொந்த கிராமத்திற்கு 90 கிமீ தூரம் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகி உள்ளது