1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (15:28 IST)

தேருக்கு அடியில் சிக்கிய 5வயது சிறுமி உயிரிழப்பு

Kerala
கேரளம் மாநிலத்தில் தேருக்கு அடியில் சிக்கிய 5வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு திருவனந்தரபுரம் கொல்லம் அருகே உள்ள புகழ்பெற்ற கொட்டாங்குளங்கரா கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
 
இந்த ஆண்டு நடந்த திருவிழாவின்போது சிறுமி தேருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சாவாரா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பக்தர்கள் தேரை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி தேரின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கியுள்ளார். இதைப் பார்த்து மக்கள் கூச்சலிட்டு, தேரை நிறுத்தும்படி கூறினர்.
 
தேரை  நிறுத்திய பின், அந்த சிறுமியை மீட்ட பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்