திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (09:59 IST)

தமிழகத்தை விட மோசமான நிலை.. பரிதாபத்தில் கேரள பாஜக..!

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி என்று கூறப்பட்டாலும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றவுடன் மக்கள் மத்தியில் கட்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் கடந்த தேர்தலை வெறும் 3% வாக்குகள் பெற்ற பாஜக இந்த முறை இரட்டை இலக்கங்களில் வாக்கு சதவீதம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஓரளவு பாஜக வாக்கு சதவீதத்தை அதிகரித்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் பரிதாபமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதை அடுத்து இரண்டாவது இடத்தில் இடதுசாரி வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவார்கள் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது 
 
பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போட்டியாகவே இல்லை என்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன 
 
பாஜக வேட்பாளராக கேரளாவில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே ஓரளவுக்கு வாக்குகள் பெறுவார் என்றும் மற்ற வேட்பாளர்கள் தோல்வியை சந்திப்பார்கள் என்றும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran