வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (21:44 IST)

விஜய்யின் ''தி கோட்'' பட ஷூட்டிங் கேரளாவில் ஏன்?

GOAT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி படம் தி கோட். இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேக, லைலா, மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி, விஜய் நேற்று கேரளாவுக்குச் சென்றபோது, கேரளா ரசிகர்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
 
அதேசமயம் விஜயையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது காரை நெருங்கியபோது, ஒரு இன்ஞ் கூட  நகர முடியாதபடி, அந்த சூழ்ந்ததால் கார் நொறுங்கியது.
இந்த  நிலையில் நேற்று காலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மதியம்தான் விமானத்தின் கேரளாவுக்கு சென்றார்.
 
நேற்று இரவுவரை ஷூட்டிங் நடந்ததால், வெங்கட்பிரபு இன்று காலையில் விமானத்தில் புறப்பட்டு கேரளாவுக்குச் சென்றுள்ளார். அவருடன் அவரது தம்பி பிரேம்ஜி சென்றுள்ளார். இன்றிரவு முதல் தி கோட் ஷூட்டிங் நடைபெறவுள்ளது.
 
இலங்கையில் ஒரு மைதானத்தில் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடத்துவதற்குப் பதிலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருந்தது. ஆனால்  தற்போது ஐபிஎல்  போட்டி  நடக்கவுள்ளதால் கேரளாவில் உள்ள கிரீன்பீல்ட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிளைமேக்ஸ் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், நேற்று விஜயுடன் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் சென்றுள்ளதால் விஜய் ரசிகர்களையும், மக்கள் இயக்க நிர்வாகிகளையும் சந்தித்து கட்சிகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.