திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (23:05 IST)

விஜய்யின் ''தி கோட்'' பட ஷூட்டிங் ....வெளியான புதிய தகவல்

GOAT
விஜய்யின் 'தி கோட் 'படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 31 ஆம் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் தி கோட்.
 
இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட  நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்கும்  இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிற்காக படக்குழு சமீபத்தில் கேரளாவுக்குச் சென்றனர்.
 
காவலன் படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய் அங்கு சென்றிருந்தால். எனவே 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளா சென்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
 
ரசிகர்களுடன் வேனின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார், கையில் மாலையுடன் நின்றிருந்த  ஒரு ரசிகரிடம் மாலையை வாங்கிக் கொண்டது என சுவாரஸ்யமான  நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 31 ஆம் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இன்னும் ரஸ்யாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளதால், கேரளாவில்  நடக்கும் ஷூட்டிங் வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும், அடுத்தகட்ட ஷூட்டிற்காக 'தி கோட்' படக்குழு ரஷ்யா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இப்படத்தில், யுவன் இசையில்  விஜய் பாடிய பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.