ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்.. நாளை வானில் நடக்கும் அதிசயம்..!
ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் தோன்றும் அதிசய நிகழ்ச்சி நாளை வானில் நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஏழு கோள்களும் அதன் சுற்றுப் பாதைகள் ஒரே டிகிரிக்குள் வருவதால் ஒரே நேர்கோட்டில் அந்த கோள்கள் இருப்பதை நம்மால் காண முடியும் என்றும் இந்த தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ், புதன் ஆகிய 7 கோள்கள் நாளை அதாவது ஜனவரி 21ஆம் தேதி ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமின்றி அந்த கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொடர்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றுவது மிகப்பெரிய அதிசயம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஏழு கோள்கள் நேர்கோட்டில் இரவு நேரத்தில் ஒரு அரை வட்டத்தை உருவாக்கி காண்பவர்களுக்கு நீங்கா நினைவுகளை கொடுக்கும் என்றும் இனிமேல் இந்த ஏழு கோள்களும் ஒரே நேர்கோட்டில் நிகழும் நிகழ்வு நடக்கப்போவது இல்லை என்றும் கூறியுள்ளனர். நாளை இரவு 8.30 மணிக்கு அதிசயத்தை பார்க்கலாம் என்றும் இரவு 11:30 மணி வரை இது தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva