நடுவானில் திடீரென இயந்திர கோளாறு.. சென்னையிலிருந்து கிளம்பிய விமானத்தால் பரபரப்பு..!
சென்னையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்த விமானி, விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என்று முடிவுசெய்தார். உடனடியாக, அவர் விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பின்னர், விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. சென்னையில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் விமானம் மீண்டும் சென்னையில் பாதுகாப்பாக இறங்கியது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நடுவானில் பறந்தபோது, விமானி சரியான நேரத்தில் இயந்திர கோளாறுகளை கண்டுபிடித்ததால், விமானம் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது என கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் 154 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர். பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran