வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:39 IST)

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் மரணம்… மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் நாலா சோபாராவில் இயங்கி வருகிறது விநாயகா மருத்துவமனை. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்னர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.