1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:27 IST)

நண்பனின் பிணத்தை பார்க்க மருத்துவமனை ஜன்னலை உடைத்த வாலிபர் கைது!

சென்னையில் நண்பர் ஒருவரின் பிணத்தை பார்ப்பதற்காக மருத்துவமனையில் ஜன்னலை உடைத்து வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் தனது இறந்த நண்பரைப் பார்ப்பதற்காக அலெக்சாண்டர் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனது நண்பரின் பிணத்தை பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகிகளிடம் அனுமதி கேட்க ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை
 
இதனை அடுத்து அவர் தனது நண்பரின் சடலத்தை பார்க்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டு பிரேத பரிசோதனை அறையின் ஜன்னல் கதவை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நண்பரின் சடலத்தை பார்க்க வந்த போது உணர்ச்சிவசப்பட்டு ஜன்னலை உடைத்து வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது