1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (10:23 IST)

நடிகர் செந்திலுக்கு கொரோனா பாசிடிவ்: மருத்துவமனையில் அனுமதி !

நடிகர் செந்திலுக்கு கொரோனா பாசிடிவ்: மருத்துவமனையில் அனுமதி !
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த நடிகர் செந்திலுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.