புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:21 IST)

14 பெண்களை திருமணம் செய்த 54 வயது நபர்!

14 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த 54 வயது நபர் ஒருவர் குறித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\
 
 
பெண்களுக்கு வரன் தேடும் மேட்ரிமோனியல் மூலம் அடுத்தடுத்து ஒடிசாவை சேர்ந்த ரமேஷ் சந்திரா என்ற 54 வயது நபர் 14 பெண்களை திருமணம் செய்துள்ளார் 
 
இந்த மோசடியில் ஈடுபட்ட அவரை அவரது மனைவிகளில் ஒருவரே காட்டிக் கொடுத்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது 
 
மேட்ரிமோனியல் இணையதளத்தில்  தனியாக இருப்பவர்கள், விவாகரத்தானவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களை திருமணம் செய்து அவர்களுடன் சில நாட்கள் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களுடைய நகை பணத்தை சுருட்டி கொண்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ரமேஷ் சந்திரா. இதுகுறித்து அவரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.