மதன் கௌரிக்கு திருமணம் முடிந்தது - அழகிய ஜோடியின் புகைப்படம்!
பிரபல யூடுப்பரான மதன் கௌரி Hello everyone என தொடங்கி ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இவர் உலகத்தில் நடக்கும், நிகழ்ந்த பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொள்வார்.
இவர் தனது நீண்ட நாள் காதலியான நித்யா என்பவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். அதன் படி அவருக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.