1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (21:49 IST)

சென்னை பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

சென்னை பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!
சென்னையை சேர்ந்த பெண்ணை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்ய உள்ள நிலையில் இவர்களது திருமண பத்திரிகையையும் தமிழில் அச்சடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கிளன் மேக்ஸ்வெல் சென்னையை சேர்ந்த வினிராமன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். ஆஸ்திரேலியாவில் பார்மஸி படிப்பு படித்து வரும் வினி ராமன், கடந்த சில ஆண்டுகளாக மேக்ஸ்வெல்லை காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த திருமணத்திற்கு திருமண பத்திரிகையை தமிழில் அச்சடித்து மணமகள் குடும்பத்தினர் அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகள் வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்தவர் என்பதும் ஆனால் தற்போது பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.