புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (18:11 IST)

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரித்துள்ளது. இதுவரை 559 பேர் உயிரிழந்த நிலையில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம் , மும்பையில் 3651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில், 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலானோருக்கு நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.