செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:44 IST)

இன்று செய்தியாளர் சந்திப்பு ரத்து ஏன்? அதிர்ச்சி தகவல்

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று நடக்க வேண்டிய சுகாதாரத்துறை செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தின் கொரோனா நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது செயலாளர் பத்திரிகையாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இரண்டு செய்தியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இன்று சுகாதாரத்துறை சார்பில் கொரோனா நடக்க வேண்டிய செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்ததாகவும், ஆனால் திடீர் என்று செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு குறித்த தகவல் மட்டும் செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மட்டுமின்றி இனி சில நாட்களுக்கு அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது