செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி தலைவர்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி தலைவர்
Last Modified வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (08:31 IST)
செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி தலைவர்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து அறிவித்த பிரதமர் மோடி, ஏழை எளிய மக்களுக்கு சலுகைகள் குறித்தும், நிதி உதவிகள் குறித்தும், எந்தவித அறிவிப்பையும் அறிவிக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் பல மணி நேரம் ஆலோசனை செய்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்களுகு உதவும் வகையில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது அவர் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்தும் பல்வேறு சலுகை அறிவிப்புகள் குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இஎம்ஐ சலுகைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :