ஏன் இத்தன நாளா செய்தியாளர்கள சந்திக்கல? விஜயபாஸ்கர் மழுப்பல் பதில்!

Last Modified வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:18 IST)

தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் ஏன் 15 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஆரம்பத்தில் முனைப்பாக செயல்பட்டு தினசரி நிலவரத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து வந்தார் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்த நிலையில் கட்சி தலைமை அவரை ஓரம்கட்டி அவருக்குப் பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷை முன்னிறுத்துவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் விஜயபாஸ்கர். அவரிடம் இத்தனை நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ‘நான் நேற்று முன்தினம்கூட செய்தியாளர்களைச் சந்தித்தேன். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே தவிர நீங்கள் எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.’ எனக் கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :