செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (10:12 IST)

தவறாக ஆபரேசன் செய்யும் மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை! – புதிய சட்டம்!

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் படி மருத்துவ துறையில் நடைபெறும் தவறுகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மசோதாக்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மசோதாக்களில் சிவில், க்ரைம் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களில் மருத்துவ துறையில் நடைபெறும் குற்றங்களுக்கான தண்டனைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவம் குறித்த குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு குறைந்தபட்சமாக 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் செய்திகள் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K