புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (15:12 IST)

காப்பகத்தில் சிறுமிகளுக்கு கொரோனா சோதனை… முடிவில் 5 சிறுமிகள் கர்ப்பம்… அதிர்ச்சி முடிவு!

உத்தர பிரதேச மாவட்டம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வரூப் பகுதியில் அரசு சிறுமிகள் காப்பகத்தில் 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இப்போது அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக தற்போது சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, உ.பி. மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வரூப் பகுதியில் அரசு சிறுமியர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை முடிவில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட அதிர்ச்சிகர தகவலாக 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது குற்றம் சாட்டினர். ஆனால் காப்பக அதிகாரிகளோ அந்த சிறுமிகள் கர்ப்பமாகதான் காப்பகத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.