அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கம்!
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு இந்த மாவட்டங்களில் அமலில் உள்ளது.
இந்நிலையில் இதுதவிர வேலூர், மதுரை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு ஜூன் 30 வரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.