1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (07:26 IST)

கூட்டம் கூட்டமாக குரங்குகள் பலி: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

கூட்டம் கூட்டமாக குரங்குகள் பலி: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
ஹைதராபாத் அருகே அருகே கூட்டம் கூட்டமாக குரங்குகள் பலியாகி கிடைப்பதால் அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 
 
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் திடீரென 30 குரங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. இதனை அறிந்த வனத்துறையினர் உடனே அந்தக் கிராமத்திற்குச் சென்று குரங்குகளின் உடல்களை பார்த்தபோது அந்த உடல்கள் மிகவும் சிதிலமடைந்து கிடந்தன 
 
பிரேதப் பரிசோதனை செய்யக் கூட முடியாத நிலையில் அந்த குரங்குகள் கூட்டம் இறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் ஏதேனும் விஷ உணவை சாப்பிட்டு இருக்கலாம் அல்லது யாராவது விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளனர் 
 
விவசாயிகள் பயிர்களை குரங்குகள் சேதம் செய்து வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் விவசாயிகள் யாராவது தங்கள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
ஒரே இடத்தில் 30 குரங்குகள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது