தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் நிதிஷ்குமார் தான். ஆனால்.. பாஜக வைக்கும் செக்!
- தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை - தமிழக அரசு
- 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? இன்று அறிவிக்கின்றார் முதல்வர்
- ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி: முதல்வர் பழனிசாமி
- அரசு நடவடிக்கையால் பயந்து போன கொரோனா...
பீகாரில் அடுத்த முதல்வர் யார்? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்றது என்பதும் அந்தக் கூட்டணி 125 தொகுதிகளில் வென்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்குமார் தான் என ஏற்கனவே பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் முறைப்படி இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளார். முதல்வர் பதவியை தான் கோரவில்லை என்றும் நிதிஷ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 75 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 45 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர பாஜக முன்வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் உள்துறை உள்பட முக்கிய அமைச்சர் பதவியை பாஜக வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல்வராக நிதிஷ்குமார் இருந்தாலும் முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் இருக்கும் என்பதால் பாஜக தலைமையிலான ஆட்சியை நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இன்று நண்பகல் 12 மணிக்கு பாட்னாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் முதல்வர் வேட்பாளர் முறையாக அறிவிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
அடுத்த கட்டுரையில்
