காலையில் ஈயாடிய கூட்டம்… மாலையில் பரவாயில்லை – மாஸ்டர் டீசரால் நிகழ்ந்த நன்மை!
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கூட்டம் வரவில்லை என்ற குறையை மாஸ்டர் டீசர் போக்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை முடிவடையாத நிலையில் நவம்பர் மாதம் மட்டும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இரண்டாம் குத்து மற்றும் பிஸ்கோத் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. ஆனால் தீபாவளி அன்று காலையில் இருந்தே கூட்டம் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் கம்மியாக இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மாலைக்காட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட்டம் அதிகமாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் திரையரங்குகளில் மாஸ்டர் டீசர் ஒளிபரப்பப் பட்டதுதான் என சொல்லப்படுகிறது.