வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:36 IST)

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

Password

இணைய உலகில் பல்வேறு பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் ஒரே மாதிரியான பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 

உலகம் முழுவதும் இணைய பயன்பாடு அவசியமாகிவிட்ட நிலையில் மக்கள் மின்னஞ்சல், ஓடிடி தளங்கள், செயலிகள் உள்பட பலவற்றிலும் தனித்தனியாக கணக்குகளை தொடங்கி பாஸ்வேர்ட் அமைப்பது இயல்பானதாக உள்ளது. இந்த மாதிரி பாஸ்வேர்டுகள் அமைக்கும்போது சில வலைதளங்கள் கண்டிப்பாக அதில் எண்கள், குறியீடுகள், கேப்பிட்டல் எழுத்துகள் இருக்க வேண்டும். எழுத்துகள் இத்தனைக்கும் மேல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. அதற்கு காரணம் அந்த பாஸ்வேர்ட் எளிதில் யாராலும் ஹேக் செய்யப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதால்தான்.

 

ஆனால் சமீபத்தில் நோர்ட்பாஸ் (Nordpass) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலானோரின் பாஸ்வேர்டுகள் பற்றி வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல மக்கள் பாஸ்வேர்டாக 123456 என்ற எண்ணை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாஸ்வேர்டை பயன்படுத்துகின்றனர். இது எளிதில் சைபர் மோசடிகளில் ஹேக் செய்யும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

 

அதுபோல எண்களுக்கு பதிலாக அறிவார்ந்த தனமாக பலர் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக Password என்ற வார்த்தை உள்ளது. 44 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பலரது பாஸ்வேர்டுகளை இதுபோல எளிதாக க்ராக் செய்ய முடிவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K