வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (13:45 IST)

மத்திய அரசில் 26,146 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10th தேர்ச்சி போதும்! – உடனே அப்ளை பண்ணுங்க!

Police Recruitment
மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைபிள் படையில் காலியாக உள்ள 26,146 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைபிள் படையில் காலியாக உள்ள காவல் படை மற்றும் ரைபிள் மேன் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை, கல்வி தகுதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 26,146 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆண்களுக்கு 23,347 இடங்களும், பெண்களுக்கு 2,799 இடங்களும் ஒதுக்கப்பட்டு நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2024 கணக்குப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையில் தளர்வுகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியிடங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2023. விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி தேதி 01.01.2024.

இந்த பணியிடங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_24112023.pdf இந்த அறிவிப்பை காணலாம்.

Edit by Prasanth.K