வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (10:31 IST)

நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய சிறுவன்; பிணமாக மீட்பு!

ராஜஸ்தானில் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பலர் பப்ஜி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாப்பகுதியில் 14 வது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இமாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கிய அந்த சிறுவன் தொடர்ந்து அதை விளையாடுவதிலேயே ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

நேற்று பின்னரவு 3 மணி வரை கேம் விளையாடி கொண்டிருந்தவர் காலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர், ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். சிறுவன் பப்ஜி விளையாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.