செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (23:29 IST)

3 மாத பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை

ஈரோடு மாவட்டம்  பெருந்துறைக்கு அருகே உள்ள மூங்கில் பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியர்க்கு நிதர்சனா ஸ்ரீ என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது.  இரண்டாவதாக ஆண்குழந்தை என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த சங்கீதா, வீட்டில் தனியாக இருந்தபோது, ஒரு அண்டாவில் தண்ணீர் நிரப்பி அதில் தன் 3 மாதக் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.