வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (09:47 IST)

4 நாட்களுக்கு ஒரு முறை ஏவுகணை சோதனை: என்ன செய்ய காத்திருக்கு இந்தியா??

மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா - சீனா இடைடே எல்லை பிரச்சனை சுமூக தீர்வுக்கு வரமால் இழுத்துக்கொண்டே போவதால் எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், அடுத்த வாரம் ‘நிர்பே’ சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் 24 வெவ்வேறு போர்க்கப்பல்கள் வழியாக 800 கிமீ தூரம் வரை இருக்கும் இலக்கை தாக்க கூடியது.  
 
இதுவரை சோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை, பிரித்வி-2 போன்ற ஏவுகணைகள் ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.